தங்கம் விலை நேற்று சவரனுக்கு 624 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்தது 43ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் சுமார் 37 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமிற்கு 78 ரூபாய் உயர்ந்த சவரனுக்கு 624 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 4818 ரூபாய்க்கும் ஒரு சவரன் 38,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 41 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 30 காசுகளுக்கும் கிலோ 64 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.