வாட்ஸ்அப் மெசேஜ்களை பேக்கப் செய்பவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்றார்போல் பிரச்சனையும் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. ஆனால், அந்த தொழில்நுட்பம் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்தது, பாதுகாப்பாக உபயோகிப்பதை பொருத்தே நமது வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும். வாட்ஸ்அப் உபயோகிப்போர் பலர் அதனை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல், பல பிரச்சனைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வருகிறார்கள். அதன்படி,
Chat-களை பேக்கப் எடுத்து கூகுள் ட்ரைவில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பலர், இவ்வாறு சேமித்து வைக்கும் தகவல் வேறொரு நபரால் ஹேக் செய்யப்பட்டு அவர்களும் அந்த உரையாடலை படிக்க நேரிடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்கள் வாட்ஸ்அப் செயலி வழங்கும் End to End Encryption பாதுகாப்பு பயன்பாட்டில் இருக்கும் வரை மட்டுமே பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.