Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்புங்கள் மக்களே..!! நெஞ்சுவலி வந்த மீனவர் ட்ரை சைக்கிளில் சென்ற அவலம்….. உலகம் பாராட்டும் மருத்துவ சேவை…. வைரலாகும் போஸ்டர்….!!

தமிழக அரசின் மருத்துவ சேவை குறித்த போஸ்டர் ஒன்றில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால்  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசின் சிறந்த மருத்துவ சேவையை உலகமே பாராட்டுகிறது என்பது உள்ளிட்ட செய்திகளை  சமீப நாட்களாக நாம் பார்த்து வருகிறோம். இந்த செய்தியை அறிந்த அனைவரும் தமிழக அரசின் மருத்துவ சேவையை பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, இடதுசாரிகளின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இந்த செய்தியை மையமாக வைத்து ஒரு போஸ்டர் ஒன்றை ரெடி செய்து உள்ளனர். அதில்,

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடிக்கச் சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மீனவர்கள் அவரை கரைக்கு அழைத்து வந்து ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல், ட்ரை சைக்கிளில் அவரது உடலை எடுத்துச் சென்ற அவலம் அரங்கேறியது. இந்நிலையில் இதையும், தமிழக அரசின் சிறந்த மருத்துவ சேவையை பாராட்டிய செய்தியையும் ஒருங்கிணைத்து, நம்புங்கள் மக்களே தமிழக அரசின் சிறந்த மருத்துவ சேவையை உலகமே பாராட்டுகிறது என குறிப்பிட்டுள்ளனர். 

Categories

Tech |