Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க… எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகிறது தெரியுமா?… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தடுப்பு மருந்துக்காக லட்சக்கணக்கில் சுறா மீன்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா  தொற்றினை முழுவதுமாக அளிக்க ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயார் செய்ய சுறா மீன்களின் கல்லீரலில் சுரக்கும் ஒருவகையான எண்ணெய் தேவைப்பட்டுள்ளது. இந்த எண்ணெயின் பெயர் சுறா ஸ்குவாலின் என்று கூறப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் பெற வேண்டும் என்றால் அதற்கு 3000 சுறாக்களை கொல்ல வேண்டும்.

அதே நேரம் ஒரு டன் எண்ணையை வைத்து 10 லட்சம் வரை தடுப்பூசிகளை தயார் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த எண்ணெயை எடுக்க 5 லட்சம் சுறாக்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த எண்ணெய் பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதால் வருடத்திற்கு 30 லட்சம் சுறா மீன்கள் கொலை செய்யப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |