Categories
சினிமா

காதலனுடன் பர்த்டே கொண்டாட்டம்… நயன்தாரா செய்த ஒருநாள் செலவை கேட்டீங்கன்னா அசந்துருவீங்க..!!

நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்தநாளுக்கு செய்த செலவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும்  ரசிகர்கள் மனதில் இருப்பவர் நடிகை நயன்தாரா. கதாநாயகர்களுக்கு இணையாக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. அதனை அடுத்து இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என இருந்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் குடும்பமாக சேர்ந்து கோவாவிற்கு சுற்றுலா சென்று அங்கு நயன்தாரா அவர்கள் தனது தாயின் பிறந்தநாளையும் அதனையடுத்து கடந்த 22ஆம் தேதி தனது காதலன் விக்னேஷ் சிவன் பிறந்த நாளையும் மிகவும் விமர்சையாக பார்ட்டிகள் ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார். அதன்பிறகு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்திறங்கினர்.

இந்நிலையில் தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நயன்தாரா செய்த செலவு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் பிறந்த நாள் அன்று நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாளைக்கு மட்டும் 25 லட்சம் ரூபாயை நடிகை நயன்தாரா செலவு செய்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

 

Categories

Tech |