Categories
தேசிய செய்திகள்

20 வயது இளம்பெண்ணை….. வயலுக்குள் இழுத்து சென்று…. கழுத்து…முதுகெலும்பை உடைத்து…. கூட்டு பலாத்காரம்…. உபி-யில் கொடூரம்…!!

உபி-யில் 20 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தினம் கூட அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை 32 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ்  மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது பட்டியலின பெண் ஒருவரை உயர் சாதியைச் சேர்ந்த சில கொடூர வாதிகள் வயலுக்கு இழுத்து  சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு கொடூரமாக வெட்டப்பட்டு மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மருத்துவமனையில் அந்த  பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் அந்தக் கொடூரங்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Categories

Tech |