உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் ராமமூர்த்தி திரிபாதி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் இருக்கின்ற சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 91 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.