சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜெயங்கொண்டானில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.