Categories
அரசியல் மாநில செய்திகள்

தாத்தா கொண்டு வந்தாங்க…. அடிமை அதிமுக வீழ்வது உறுதி… உதயநிதி ட்விட் …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசியனார்.

அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதுகுறித்த ட்விட் பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தைக்கும் – விவசாயிகளின் உரிமையான வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடங்களுக்கும் மூடுவிழா நடத்த மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசும்-மாநில அடிமை அரசும் வீழ்வது உறுதி. #TNstandsWithFarmers என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |