Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம்… அடிக்கடி சண்டை… கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… கணவன் எடுத்த முடிவு… தவிக்கும் குழந்தைகள்..!!

காதல் மனைவி வேறு நபருடன் சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவை சேர்ந்தவர்கள் சஞ்சீவ்குமார்-ரஜ்னி தம்பதியினர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சஞ்சீவ் தனது மனைவி அடிக்கடி போனில் யாருடனோ பேசி வருவதை கவனித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு தனது மனைவிக்கும் சத்பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மனைவியிடம் கேட்க இருவர் இடையே தகராறு ஏற்பட்டு ரஜ்னி சத்பிரகாஷை  திருமணம் செய்து அவருடன் தான் வாழ்வேன் என உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ரஜ்னி சத்பிரகாஷுடன் சென்றுவிட்டார்.

இதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்த சஞ்சீவ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோதனையிட்டதில் சஞ்சீவ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் தனது மனைவி ரஜ்னி மற்றும் சத்பிரகாஷ் என எழுதி வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |