பெண்கள் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில பாதுகாப்பான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கர்ப்ப காலம் பெண்களுக்கு மிகவும் சவாலான ஒரு காலம். தங்களது குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும், வளமான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்கள் கர்ப்பத்தில் எம்மாதிரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்கிறார்கள், எம்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களின் மனநிலை அடிக்கடி மாறும். அப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று மனம்விட்டு நண்பர்கள் அல்லது கணவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
பகலில் சிறிது நேரம் உறங்குவது புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் மனநிலையில் ஏற்படும் மாற்றம் சாதாரணமானது என்பதை உணர்ந்து அதைப் பற்றி குழப்பம் மற்றும் கவலை ஏதும் கொள்ளாமல் இருப்பது மிக மிக அவசியம். மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அசவுகரியமான நிலையை உணர்ந்தால், உடனடியாக நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து மனதை இதமாக வைத்துக்கொள்ளுதல் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதுபோன்ற சூழ்நிலையில் நல்ல இனிமையான பாடல்களை கேட்பதும், அருமையான புத்தகங்கள் படிப்பதும் ஆரோக்கியமான ஒன்று.