Categories
டெக்னாலஜி பல்சுவை

இன்று முதல் விற்பனை…. ரூ11,000 க்குள் ஸ்மார்ட் போன் வேண்டுமா….? இத விட பெஸ்ட் இல்ல…..!!

ரியல் மீ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் இன்றைய தினம் விற்பனைக்கு வருகிறது. 

சமீபத்தில் மொபைல் போன்கள் அனைத்திற்கும் சரியான போட்டியாக இருப்பது ரியல்மீ நிறுவனம்தான். மாதத்திற்கு ஒரு முறை தங்களது புதிய பொருட்களை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மீ நிறுவனத்தின் நார்சோ20 ஸ்மார்ட் போன் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது. 4 ஜிபி ram 64 ஜிபி rom வேரியண்ட்டில் வெளியாகும் மாடலின் விலை 10 ஆயிரத்து 599 ஆகவும், 4  ஜிபி ram 128gb rom வேரியண்ட்டில் வெளியாகும் மாடலின் விலை ரூபாய் 11 ஆயிரத்து 499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 6000ah பெரிய அளவிலான பேட்டரி கொண்ட இந்த போனிற்கு 18w சார்ஜ் வசதி கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது. எனவே சார்ஜ் விரைவாக செய்யப்படுவதுடன் நீண்ட நேரம் நீடித்து நிற்கும். இந்த போனை எச் எஸ் பி சி, ஆக்சிஸ் பேங்க் கார்டு கொண்டு வாங்கினால் 5 சதவிகிதம் தள்ளுபடி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |