பிக் பாஸ் போட்டியாளர் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்
நடிகையும் பாடகியுமான ஹிமான்ஷி குரானா தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் ஹிந்தியில் உள்ள பிக்பாஸ் சீசன் 13ல் பங்கேற்ற பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CFoTAKRBmJM/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/CFPrKxRh-WM/?utm_source=ig_web_copy_link