திருச்சியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக பாஜகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், திருச்சியில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கும் குணமே காவி, அதை தவறான சிந்தனையில் பயன்படுத்துவது பண்பல்ல என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.