Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி – வாக்களித்தவர்களுக்கு அடி உதை

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானையில் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, பெண்கள் உள்ளிட்ட பலரை கண்மூடித்தனமாக தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாடானை அருகே நகரிக்காதான் கிராமம் உள்ளாட்சித் தேர்தலில் திரு கருப்பையா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தோல்விக்கு அக்கிராம மக்கள்தான் காரணம் என கருதி அவ்வப்போது அவர்களுடன் கருப்பையா தரப்பினர் தகராறில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரண்டு கார்களில் அடியாட்களுடன் கிராமத்திற்கு வந்த கருப்பையா தனக்கு வாக்களிக்காதவர்களை சரமாரியாக தாக்கினர்.

இதில் இரண்டு பெண்கள், சிறுவன் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Categories

Tech |