திரு மண்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் தற்போது இல்லாததை இந்தியா உணர்வதாக திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து பதிவில் திரு மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை இந்திய நாடு தற்போது உணர்வதாகவும், அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.