Categories
தேசிய செய்திகள்

வளர்ச்சி பாதையில் இந்தியா….. இந்த 3 மந்திரம் தான் காரணம்….. ஐநா கூட்டத்தில் பிரதமர் பெருமிதம்….!!

ஐநாவின் பொதுக்கூட்டத்தில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மூன்று தாரக மந்திரத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தாலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே இதனை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி தான் ஒரே வழி என்பதால், அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், இந்தியா மூன்றாவது கட்டத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், சுயசார்பு திட்டம் எவ்விதமான பாகுபாடுமின்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் நலத்திட்டங்களை கொடுக்கிறது. Reform, Perform, Transform என்ற மூன்று தாரக மந்திரம் மூலம் இந்தியா வளமான திசையில் பயணிக்கிறது என பெருமிதமாக தெரிவித்துள்ளார். 

Categories

Tech |