Categories
சினிமா

அஜித் ஏன் இப்படி இருக்காரு ? விஜய் தான் சூப்பர்…. எஸ்பிபியை மறந்த தல….!!

சினிமாவில் தான் அறிமுகமாக காரணமாக இருந்த எஸ்பிபி அவர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜித் வெளியிடவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னையை அடுத்த தாமரைப்பக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சினிமா துறை மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்தது. எனவே அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

இதனிடையே எதிர்பாராதவிதமாக இளையதளபதி விஜய் அவர்களும் எஸ்.பி.பியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். ஆனால் திரையுலகில் முதன்முதலாக அஜீத் குமாரை நடிகராக அறிமுகப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்பிபி. அவரது இறுதி அஞ்சலிக்கு அஜித்குமார் வரவில்லை. கொரோனா காரணத்தினால் பங்கேற்கவில்லை என்றாலும் இரங்கல் அறிக்கை கொடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எஸ்பிபியின் மகனான சரணும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்கள். ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடிக்க போகும் போது சரணின் உடைகளை தான் அஜித் போட்டு செல்வது வழக்கம். அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் என்ற படத்தில் அஜித்திற்கு நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தந்தது எஸ்பிபி அவர்கள்தான். இந்த அளவிற்கு உதவி செய்தவருக்கு இரங்கல் செய்திகூட அஜித் கொடுக்க வில்லையே என பலரும்  கூறி வருகின்றனர்

 

Categories

Tech |