Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி டார்ச்சர் செய்த கொழுந்தன்… ரசித்த கணவன்…. பக்காவாக பிளான் போட்ட இளம்பெண்…!!

தன்னை வன்கொடுமை செய்யும் கணவர் மற்றும் அவரது சகோதரர் இடம் இருந்து தப்பிக்க பெண் போட்ட நாடகம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூர் அருகே இருக்கும் மஹானகரா  பல்லிகே என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் போன்று இருவர் சென்று ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பெண் அனுமதிக்கப்பட்டதாக கூறிய தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, அங்கு அவ்வாறு எந்த பெண்ணும் அனுமதிக்கப் படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து கணவர் மற்றும் அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அழித்ததோடு செய்தித்தாள்களிலும் பெண்ணின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த பெண் காவல் ஆய்வாளரை நேரடியாக தொடர்பு கொண்டு நான் வீட்டை விட்டு வெளியேறுவதற்காகவே எனது தோழி கூறிய ஆலோசனைப்படி இந்த நாடகத்தை அரங்கேற்றினேன்

மற்றபடி நான் காணாமல் போகவில்லை. தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவர் உதவியுடன் இந்த நாடகத்தை திட்டமிட்டபடி நடத்தி அங்கிருந்து தப்பித்து விட்டேன். எனது கணவரும் அவரது சகோதரரும் தொடர்ந்து என்னை வன்கொடுமை செய்து வந்தனர். அதன் காரணமாகவே அங்கிருந்து வெளியேற முடிவு செய்து இந்த செயலை செய்தேன். மீண்டும் எனக்கு அங்கு செல்ல துளியும் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |