இறந்த குட்டி குரங்கை தாய் குரங்கு தூக்கி தடவிக்கொடுத்து, வாயில் வைத்து ஊதியது நடைப் பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் கண்கலக்க வைத்தது.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் அமைத்துள்ள ஏற்காடு மலைப்பாதையில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலைப் பாதைகளில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில் நேற்று காலை குட்டிக் குரங்கு ஒன்று வாகனத்தில் சிக்கி இறந்துள்ளது.
இறந்துபோன குட்டியை தாய் குரங்கு ரோட்டின் ஓரத்திற்கு எடுத்துவந்து உயிர் பெற அதனை குலுக்கி தடவி, வாயில் வைத்து ஊதியது. இது அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்களின் மனதை வதைக்கும் கட்சியாக இருந்தது.அதன் பிறகு அப்பகுதியில் கூட்டம் அதிகமானதால் இறந்த குட்டி குரங்கை தூக்கிக்கொண்டு தாய் குரங்கு மறைவான வனப்பகுதிக்கு சென்று விட்டது.