ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் திருட்டுத்தனமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்த பெண் விற்பனையாளரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சத்தியமங்கலத்தை ராஜன் நகர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு அமைந்துள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காமல் தனிநபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடையின் பின்புறம் பல லிட்டர் மண்ணெண்ணெயை தனிநபருக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதை கண்ட கிராம மக்கள் பெண் விற்பனையாளரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்குச் சென்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இளங்கோ பார்வையிட்டு மேலாளருக்கு தகவல் அளித்ததன் பேரில் பெண் விற்பனையாளர் மீது புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.