மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வடமாநிலங்களில் கொதித்து எழுந்துள்ள விவசாயிகள் இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக விவசாயிகள் குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களும் சட்டம் ஆனால் தங்களது எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆகவே 3 மசோதாகளையும் மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.