Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்தமருத்துவம்: 1,695 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 குழந்தைகள் உட்பட 150 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |