மனைவியின் கனவை நனவாக்க கணவன் யானை வாங்கிவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திர ராயின்-துளசி ராணி தசி தம்பதியினர். மனைவியின் மீது அதீத பாசம் கொண்ட சந்திர ராயின் மனைவி கனவு காண்பதை நனவாக்க துடிப்பவர். சில சமயங்களில் துளசியின் கனவில் மிருகங்கள் வருவதுண்டு. இதுகுறித்து அவர் தனது கணவனிடம் பகிர்ந்தால் உடனடியாக கனவில் வந்த மிருகத்தை மனைவியின் கண்ணெதிரே கொண்டு நிறுத்தி விடுவதை சந்திர ராயின் வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை குதிரை, ஆடு, அன்னம் போன்ற மிருகங்களை சந்திர ராயின் வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு துளசியின் கனவில் யானை ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்து கொண்ட சந்திர ராயின் எவ்வளவு செலவு ஆனாலும் மனைவியின் கனவை நினைவாக்க யானை வாங்க முடிவு செய்ததோடு அதனை செய்து முடித்துள்ளார். யானை வாங்குவதற்கு தன்னிடம் போதிய காசு இல்லாத நிலையிலும் தன்னிடம் இருந்த நிலத்தை விற்பனை செய்து அந்த பணத்தை வைத்து அதிக விலை கொடுத்து யானையை வாங்கியுள்ளார்.
யானை மட்டுமல்லாது அதனை கவனித்துக்கொள்ள இப்ராஹிம் என்ற யானைப் பாகனையும் சம்பளம் கொடுத்து அழைத்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த அவர்களது ஊர் மக்கள் அத்தம்பதிகளையும் யானையையும் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதோடு அவர்கள் கிராமத்தில் புகழ்பெற்ற தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.