பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ரோஜா தொடரில் நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், ரோஜா போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட் ரங்கநாதன். தற்போது இவருக்கு இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடிகர் வெங்கட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் அலுவலகத்திலிருந்து என்னை அழைத்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
நான் அவரை சந்திப்பதற்கு முக்கிய காரணமே அவரது மனைவியான சோபா தான் இயக்குனர் அவர்கள் கதாநாயகன் தேடிக் கொண்டிருந்த சமயம் சோபா அவர்கள்தான் என்னை பரிந்துரைத்துள்ளார். இவை அனைத்துமே ஊரடங்கிற்கு முன்பு நடந்த சம்பவங்கள். அனைத்தும் சரியாக நடந்திருந்தால் தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கும். இந்த நிகழ்வை நிச்சயம் என்னால் மறக்க இயலாது. இதைப்போன்று தளபதி விஜய் அவர்களை நிச்சயம் ஒருநாள் சந்திப்பேன்” என பதிவிட்டுள்ளார் .