Categories
தேசிய செய்திகள்

பள்ளி சேர்க்கை நடைபெறும் போது… காதலிகளை சந்தித்த காதலர்கள்… பின் நடந்த சோகம்..!!

காதலிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பல்லியாவை சேர்ந்தவர்கள் விஷ்ணு குப்தா மற்றும் பிட்டு. இவ்விருவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பு சேர்வதற்காக அருகே இருந்த ஊருக்கு சென்று உள்ளனர். அங்கு பள்ளி சேர்க்கையை விட்டு காதலியை சந்திக்கச் சென்ற அவர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்த இரண்டு இளைஞர்களும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

பிட்டு  சுய நினைவின்றி மயங்கி விட விஷ்ணு குப்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதனிடையே விஷ்ணுவின் தந்தை காவல் நிலையத்தில் இரண்டு பெண்கள் மீதும் புகார் கொடுத்தார். காதல் விவகாரத்தினால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

 

 

Categories

Tech |