உச்சநீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து விசாரிக்க மூத்த வழக்கறிஞர் திரு பிரசாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் திரு பிரசாந்த்பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தவறுக்கு மன்னிப்புக் கூறும் படி பலமுறை அறிவுறுத்தியும் அவர் மன்னிப்புக் கூறவில்லை இதனால் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்திய பூஷன் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி ஆஜராகும்படி பிரஷாந்த் பூஷனுக்கு டெல்லி பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் வழக்கறிஞராக தொடர்வதில் அவருக்கு ஏதேனும் சிக்கல் நீடிக்குமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.