வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் அறிவிக்கப்படும்.
ஏர்டெல் வழங்கி வரும் ரூ.998 சலுகைக்கு போட்டியாக வோடபோன் சலுகை அமைகிறது. ஏர்டெலில் ரூ.998 க்கு பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS, 12 GP டேட்டா, ஏர்டெல் டி.வி. சந்தா உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதிக அளவு டேட்டாவை விரும்புவோர் வோடபோன் வழங்கும் ரூ.1,699 சலுகையை தேர்வு செய்யலாம். ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 GP டேட்டா, தினமும் 100 SMS உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.