ஜிப்மர் மருத்துவமனையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வருகின்ற 29ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள், வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான நுழைவுத்தேர்வு சென்ற 22ம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்த நுழைவுத் தேர்வினை சுமார் 4 ஆயிரம் பேர் எழுதியுள்ள நிலையில் இத் தேர்வின் முடிவுகள், வரும் 29ம் தேதி கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், அதைதொடர்ந்து 30ம் தேதியிலிருந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும், கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.