Categories
சினிமா

நடுரோட்டில் இப்படி செய்யலாமா…. காரில் இளைஞர்கள் செய்த செயல்… வீடியோ வெளியிட்ட நடிகர் விஷ்ணு..!!

நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்

ஐதராபாத்தில் வசிக்கும் நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஷ்ணு விஷால் தனது காரில் சாலையில் போய்க் கொண்டிருந்தபோது அவரது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இளைஞர்கள் இருவர் சீட்டில் உட்காராமல் டோரின் மேல் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ந்து போன விஷ்ணு விஷால் அதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டதோடு, அதில் “நமது நாட்டில் படித்த இளைஞர்கள், சாதாரணமாக நான் இவ்வாறு செய்ய மாட்டேன். ஆனால் இதனை நிச்சயம் இங்கு பதிவு செய்வேன். அந்த இளைஞர்கள் இருவரும் தங்களது உயிரை மட்டுமல்லாது மற்ற பயணிகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்டனர். ஹைதராபாத் காவல் அதிகாரிகள் இதனை கவனித்தாக வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

 

Categories

Tech |