Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிப்பு..!!

புதுச்சேரியில் நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் கங்காதரர். இவர் வீடு முன்பு கார்  நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் திடீரென நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக பெரியகடை காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து பார்த்த போது கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து பெரியகடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |