Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாங்கிய கடனை திருப்பி செலுத்ததால் நெருக்கடி தாங்காமல் காவலர் தூக்கிட்டு தற்கொலை …!!

சேலம் மாவட்டத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல்படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரிந்த சக காவலர்யிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகையை திரும்ப செலுத்தும்படி சககாவலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் வெங்கடேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரது சகோதரரிடம் செல்போனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தங்கியிருந்த தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாங்கிய கடனை செலுத்த முடியாமல் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சேலம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |