Categories
தேசிய செய்திகள்

“கொடூரத்தின் உச்சம்” என்ன குழந்த பிறக்கும்…. கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கணவன்…!!

வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தெரிந்துகொள்ள கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலம் நெக்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். இவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என கூறிவந்த பன்னலால் மனைவியின் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள கூர்மையான ஆயுதத்தால் வயிற்றை கிழித்து உள்ளார்.

இந்த கொடூர செயலில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிர் இழந்து விட்டது. அதோடு ஆண் குழந்தைதான் வேண்டும் என கூறிவந்த பன்னலால் மனைவியின் வயிற்றை கிழித்ததில் உயிரிழந்தது ஆண் குழந்தை என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பன்னலால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |