Categories
சென்னை மாநில செய்திகள்

ஓடும் கண்டெய்னர் லாரியில்… 2.5 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை… போலீசார் விசாரணை..!!

சென்னையில் இருந்து தெலுங்கானாவிற்கு  சென்ற கண்டெய்னர்  லாரியில் இருந்து  2.5 கோடி மதிப்புடைய செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் வைத்து   சென்னையில் இருந்து கண்டெய்னரில்  கொண்டுவரப்பட்ட   செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது  . இதேபோல் கடந்த 20 நாட்களுக்குள்  2 சம்பவம் நடைபெற்றது. அதாவது முன்னதாக சென்னையில் இருந்து வேறு பகுதிக்கு சென்ற  கண்டெய்னர்  ஓட்டுனரை தாக்கி விபத்து ஏற்படுத்தி 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள்  கடதத்ப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு குறித்து  காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி குண்டூர் பகுதியில் ஓடும் கண்டெய்னர் லாரியில் இருந்து ஒரு கோடி மதிப்பிலான 950 செல்போன்கள் திருடப்பட்டு இருக்கிறது. அது குறித்த விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் இந்த சம்பவமானது நடந்திருக்கிறது. இந்த சம்பவம்  குறித்து ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே குண்டூரில் நடந்த சம்பவமும்,தற்போது தெலுங்கானாவில் நடந்த சம்பவமும்  ஓடும் கண்டெய்னரில் இருந்து திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது . இது குறித்து ஓட்டுனரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அந்த கண்டெய்னரில் இருந்து 2.5 கோடி மதிப்பிலான 2800 செல்போன் திருடப்பட்டது    முதற்கட்ட விசாரணையில்  உறுதியாகி  உள்ளது. மேலும் தொடர்ச்சியாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |