தனியார்மயம் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து வரும் 29ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு செல்வம், வருகின்ற செப்டம்பர் 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் தேசிய எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. தேசிய எதிர்ப்பு தின பிரதானமான கோரிக்கை புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. உதாரணமாக ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், ராணுவம் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. மத்திய, மாநில பணியிட காலி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.