இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் முன்கள போராளிகளாக முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், போர்க்கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதன்முறையாக போர்க்கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். சப்-லெப்டினன் குமுதினி தியாகி மற்றும் சப்-லெப்டினன் ரீத்தி சிங் ஆகியோர் கடற்படை போர்க் கப்பல்களில் முன்கள பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தாங்கள் இருவரும் 60 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது எனவும் பெண் அதிகாரிகள் தெரிவித்தன. ஏற்கனவே இந்திய விமான படகில் ரஃபேல் போர் விமானத்தில் விமானியாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் போர்கப்பலிலும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.