தமிழ்நாட்டில் மேலும் 5,516 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,516 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்ந்துவிட்டது.
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,211ஆக அதிகரித்துவிட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 996 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சென்னையில் இதுவரை 1,55,639 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.