Categories
விளையாட்டு

விராட் கோலி அதிரடி சதம்…..மீண்டும் பெங்களூரு இமாலய ரன் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது.  

ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  பதிலாக டேல் ஸ்டெய்ன் சேர்க்கப்பட்டார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர்.

 

பார்த்திவ் பட்டேல் 11 ரன்கள் எடுத்தநிலையில் சுனில் நரேன் சுழலில் ராணாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த அக்ஷ்தீப் நாத்தும் 13 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு  மொயின் அலியும், விராட் கோலியும் ஜோடி சேந்தனர். விராட் கோலி ஒருபுறம் பொறுமையாக விளையாட மொயின் அலி அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

குறிப்பாக குல்தீப் தீப் யாதவின் 16வது ஓவரில் 4,6,4,6,6 என விளாசிய மொயின் அலி 28 பந்துகள் 66 ரன்கள் (6 சிக்ஸர், 5 பவுண்டரி) கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஸ்டோய்னிஸ் களமிறங்கினார். அதன் பிறகு விராட் கோலி அதிரடியாக விளையாட ரன் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி ஓவரில் 5 வது பந்தில் தனது சதத்தை பதிவு இறுதி  பந்தில் விராட் கோலி   58 பந்துகளில் 100 ரன்கள் (9 பவுண்டரி, 4 சிக்ஸர்)  ஆட்டமிழந்தார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவர் பங்குக்கு 17* (8) ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் ஹாரி கர்னி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸெல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 214 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

 

Categories

Tech |