திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த பிரம்மோற்சவத்தை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளிலும் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனினும் கோவிலில் நடைபெறக்கூடிய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.