கொரோனாவை கையாளுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என உலக பணக்காரர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக உலகப் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகப்போருக்கு அடுத்தபடியாக இப்போது ஏற்பட்டிருக்கும், இந்த மிகப்பெரும் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த, கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அது இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பல வளரும் நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை பணக்கார நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யாமல், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க இந்தியா வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.