Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ”ரூ. 7,167.97 கோடி” கொரோனா செலவு ……!!

தமிழகத்தில் ரூ. 7,167.97 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு தற்கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதாக காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு இதுவரை செலவு செய்தது குறித்து துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதில் தமிழக அரசு இதுவரை கொரோனாவுக்கு ரூ. 7,167.97 கோடி செலவு செய்துள்ளது என குறிப்பிட்ட ஓ.பி.எஸ், நிவாரணத்தொகைக்காக ரூ.4,896.05 கோடி, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக ரூ. 638.85 கோடி, மருத்துவ உபகரணம், மருந்துக்கள் வாங்க ரூ.830.60 கோடி, மருத்துவ கட்டுமான பணிக்கு ரூ.147.10 கோடி, தனிமைப்படுத்தலுக்காக ரூ. 262.25 கோடி, கூடுதல் பணியாளர்களின் ஊதியம், உணவுக்கு ரூ.243.50 கோடி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு 143.63 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Categories

Tech |