Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே இவுங்க தான் காரணம்…. திமுக – காங் கூட்டணியை வெளுத்த எடப்பாடி …!!

தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க கூடிய நிலையில், நீட் தேர்வு தமிழகத்தில் ஆரம்ப கட்டத்தில் வருவதற்கு அடித்தளமாக இருந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததாகவும், அப்போது திமுக  காங்கிரஸுடன் கூட்டணியில் அங்கம் வகித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில்  குறிப்பிட்டிருக்கிறார். எனவே 2010 ஆம் ஆண்டு நீட்தேர்வு கொண்டு வரும்போது அதற்கு உறுதுணையாக இருந்த திமுக தற்போது அரசியல் செய்வதற்காக தொடர்ச்சியாக தமிழக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றும் கூறினார்.

அதே போல தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் போது கூட இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்தபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசை சேர்ந்தவர்கள் தான் மேல்முறையீடு மனு செய்து வழக்கு தொடுத்தார்கள் என்றும், சாதகமான தீர்ப்பு வரும் போது மேல்முறையீட்டு மனு மூலமாக இந்த தீர்ப்பினை திசை திருப்பினார்கள் என்று சட்டசபையில்  தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பதில் அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டீர்கள் .

Categories

Tech |