Categories
தேசிய செய்திகள்

வெங்காய ஏற்றுமதிக்கு தடை… அரசின் அதிரடி உத்தரவு…!!

வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  அந்த வகையில், சென்ற சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சென்ற நிதி ஆண்டில் மட்டும் வெங்காயம் ஏற்றுமதியானதில் சுமார் 50 சதவீதம் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காயம் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வகையான வெங்காயம் எற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்ற ஆண்டும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |