நடிகர் ரஜினிகாந்த் விருப்பப்பட்டால் அவர் துவங்க உள்ள கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், பாஜக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு தற்போது பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட் இல்லாத காரணத்தால்தான் நீட் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர் என்றும், தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் தான் இருக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர் காட்சிகள் கூறி வருவதாகவும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.
நீட் தேர்வு என்பது பல்வேறு மாநிலங்களில் நடைபெற கூடியது. 8 மாதம் கழித்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறி வருவதை அவர் விளக்க வேண்டும் என கூறினார். திரைப்பட நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் சேர்த்துக் கொள்வோம் என்றும் நயினார் நாகேந்திரன் ரஜினி விருப்பப்பட்டால் பாஜக அவர் துவங்க உள்ள கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.