அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சில மாநிலங்களில் இம்மழையானது வெள்ளமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வெள்ள பாதிப்பால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது சில தினங்களாக கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜெய் பராலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை முடக்கிப் போட்டுள்ளது.
இதனால் தேமாஜி, லக்சுமிபூர், பிஸ்வநாத் மற்றும் சிராங் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டப் பகுதிகளில் 4,200 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெள்ளம் காரணமாக 34 ஆயிரம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.