நீட் தேர்வின் கெடுபிடிக்கான காரணங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்றுமுன்தினம் மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினமும் நீட் தேர்வில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்றுள்ளன.
இது குறித்து தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், பலர் கேள்வியும் விவாதங்களையும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நம் பிள்ளைகள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட்தேர்வு கெடுபிடிக்கான காரணம் என ட்விட் செய்துள்ளார். மேலும் இரண்டு மணி தேர்வுக்கு 11:00 மணிக்கே வந்துவிட வேண்டும்.
மதிய உணவு இல்லை. மாணவர்களுக்கு வழிகாட்ட சரியான தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறை கூட குறிப்பிட்ட நிறத்தில் வைத்திருக்க வேண்டும். வெயிலில் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லை என கடுமையாக சாடியுள்ளார்.