Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆன்மீக பெரியார்” இப்போது இல்லை என்றால்… எப்போதும் இல்லை…. ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்….!!

ராமநாதபுரத்தில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பரபரப்பு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. 

தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தக்கூடியது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள் தான். இந்த போஸ்டர் வேலைகள் மதுரை மாவட்டத்தை சுற்றி ஏராளம் நடைபெற்று அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. அதன்படி, நடிகர் விஜய், சூர்யா, அஜித், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ரசிகர்கள் போஸ்டர்கள் பரபரப்பாக அடித்து வந்த பட்சத்தில், தற்போது ராமநாதபுரத்தில் நடிகர் ரஜினியின் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர் ஒன்றை அடித்து ஒட்டியுள்ளனர். அதில்,

கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட பெரியாரை மையமாக வைத்து கடவுள் நிந்தனை ஒழியட்டும், ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும் என ரஜினியை பெரியாரோடு ஒப்பிட்டு ஆன்மீக பெரியார் என பெயர் சூட்டி புதிய போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்தப் பெரியார் நாத்திகத்தை மையமாக வைத்து அரசியல் பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த ஆன்மீக பெரியார் இந்து மக்களுக்கான ஆன்மீக அரசியல் மேற்கொள்வார் என்பதுதான் இதன் அர்த்தம். மேலும் அந்த போஸ்டரில் அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை என்று குறிப்பிட்டு ரஜினியை அரசியலுக்கு வரவேற்றுள்ளனர். 

Categories

Tech |