Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா… கண்டிப்பா இத ரத்து செய்வோம்”… நாராயணசாமி உறுதி…!!

இடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு என்பது கட்டாயம் தடை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக கருதப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. நீட் தேர்வை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு தலைவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி புதுச்சேரி முதலமைச்சர் தற்போது அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதாவது, மூலக்குளம் பகுதியில் நீட் தேர்வு நடைபெற்ற தனியார் கல்லூரி ஒன்றை ஆய்வு செய்து பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் அவர்கள் செவி சாய்க்கவில்லை” இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார். மேலும், இடைப்பட்ட காலங்களில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திட்டவட்டமாக முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Categories

Tech |