நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெறிவித்து ஸ்டாலின் பதிவிட்ட கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் என பாஜக துணைத் தலைவர் பரபரப்பு கருத்து ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து மூன்று உயிர்கள் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். நீட் தேர்வு தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி வந்தனர். இந்நிலையில், எட்டு மாதத்தில் நீட்தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாக தகவல் ஒன்று வெளியானது.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால், நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஸ்டாலின் அவர்கள் கூறியது, நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தெரிவித்துள்ளார். இறந்த மூன்று மாணவிகளின் நிலை குறித்தும், குடும்பங்கள் குறித்தும் கவலைப்படாமல் இவர் நீட் தேர்வுக்கு ஆதரவாக இதுபோன்ற பதிவை தெரிவித்தது மக்களிடையே பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது