கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு, சிறப்பு வேலாண் மண்டலம், மீனவர்களுக்கு 5000 இலவச வீடுகள், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் என கரூர் நகர் முழுவதும் தமிழக அரசின் 23 நலத்திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கரூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் இல்லாமல் மாவட்டத்துக்கு தொடர்பில்லாத விருதுநகர் மாவட்ட அமைச்சரான ராஜேந்திர பாலாஜியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது அதிமுக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.